3 வயது சிறுமிக்கு திருமணம் நடத்திய குடும்பத்தினர்!

3 வயது சிறுமிக்கு திருமணம் நடத்திய குடும்பத்தினர்!

யேமனில் உணவு மற்றும் இருப்பிடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக 3 வயது சிறுமியை அவரது குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

யேமனில் வாழும் மக்கள் அதிகளவில் உணவு மற்றும் இருப்பிடம் கிடைக்காமல் தவிக்கும் நிலையில் இளவயது திருமணங்கள் அதிகரிக்கின்றன.

அந்தவகையில், 3 வயது சிறுமியை செல்வந்தருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதற்கு பதிலாக சிறுமியின் குடும்பத்தார் உணவுகள் மற்றும் இருப்பிடத்தை செல்வந்தரிடம் இருந்து பெற்றுள்ளனர்.

யேமனில் உணவு பொருட்களில் விலை அதிகரித்துவரும் நிலையில் பொதுமக்களின் வருமானம் குறைந்து வருகின்றது.

இதன் காரணமாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து யேமனில் யுத்தம் அடிக்கடி இடம்பெறுவதால் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

போர் மற்றும் சண்டை பிரச்சினையால் பசி பட்டினி நிலவுகின்றது. பசியை சமாளிக்க மக்கள் மோசமான செயலை செய்கின்றார்கள்.

அந்தவகையில், தங்களின் குழந்தைகளின் வாழ்க்கையை பணயம் வைக்கும் கட்டாயத்துக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net