நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட கூடாது!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட கூடாது!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படக்கூடாது என்பதே தனது நிலைபாடு என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பதாகத் தெரிவித்தே அனைத்துக் கட்சிகளும் ஆட்சிக்கு வந்தன. ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படக் கூடாது என்பதே எனது நிலைப்பாடு. ஆனால் நிறைவேற்ற அதிகார ஜனாதிபதி முறைமையில் உள்ள அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும்.

ஆனால் தற்போதைய ஜனாதிபதி சுயமாக முன்வந்து 19 ஆவது திருத்தத்தின் ஊடக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் உள்ள பல சரத்துகளை குறைத்துள்ளார்.

ஆகவே 2020 ஆம் ஆண்டு தெரிவாகும் ஜனாதிபதி, தற்போதைய ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களை விடவும் அதிகாரம் குறைந்தவராக காணப்படுவார். நாட்டில் நல்லிணக்கத்திற்கு ஏக மனதாகத் தெரிவாகும் ஜனாதிபதியே தேவைப்படுகின்றார்.

எனவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பது குறித்து மக்கள் விடுதலை முன்னணியுடன் கலந்துரையாடத் தயார்” என அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net