அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

எதிர்வரும் 5ம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்க ஊழியர்களின் சம்பளங்கள் மூவாயிரம் ரூபாவிற்கு குறையாத வகையில் அதிகரிக்கும் எனவும், ஓய்வூதியம் பெற்றுக் கொண்டோரின் கொடுப்பனவு 1500 ரூபாவிற்கு குறையாமல் உயர்த்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்க ஊழியர்களின் சம்பளங்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பத்தாயிரம் பேருக்கு புதிதாக சமுர்த்திக் கொடுப்பனவு திட்டத்தின் நலன்கள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளில் வீட்டுப் பணிப் பெண்களாக கடமையாற்றி நாடு திரும்பம் பெண்களுக்கு வீடுகளை நிர்மானிப்பதற்கும், தொழில் தொடங்குவதற்கும் 25 லட்சம் ரூபா வரையில் சலுகை வட்டி அடிப்படையில் கடன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர எதிர்வரும் 5ம் திகதி நாடாளுமன்றில் வரவு செலவுத் திட்ட உரையை ஆற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net