சரியான நேரத்தில் அரசியலுக்கு வருகிறேன்!

சரியான நேரத்தில் அரசியலுக்கு வருகிறேன்!

சிறந்த வில்லியாக நடித்து வரும் வரலட்சுமி சமீபத்தில் சிறந்த வில்லிக்கான விருதினையும் பெற்றுக் கொண்டார்.

இந்தநேரத்தில் வரலட்சுமியிடம் அரசியலுக்கு வருவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

அதற்கு பதிலளித்த வரலட்சுமி,

“அரசியலை நன்கு கற்றுக் கொண்டு இருக்கின்றேன். கற்று கொண்ட பிறகு சரியான நேரத்தில் அரசியலுக்கு வருவேன். நமக்கு நாமே என பெண்கள் பாதுகாப்பும், தற்காப்பும் கற்றுக் கொள்ள வேண்டும்.

சமூக வலைதளங்களை சரியான வழியில் பயன்படுத்த வேண்டும். அரசியல் என்பது கெட்ட வார்த்தை அல்ல. தற்போதுள்ள சூழலில் ஒருவிரல் புரட்சி தேவை. எனது அப்பா சரத்குமாரின் அரசியலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” எனக் கூறினார்.

சரத்குமாரின் மகளாக சினிமாவுக்கு வந்திருந்த வரலட்சுமிக்கு சினிமா நடிகை ஆகும் ஆசை வந்தது. முதன் முதலாக விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சிம்பு ஜோடியாக போடா போடி திரைப்படத்தில் நடித்தார்.

அதனைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நாயகியாக நடிக்கும் திரைப்படங்கள் வெற்றி பெறாமல் போகவே தனது செயற்பாடுகளைமாற்றினார்.

விக்ரம் வேதா திரைப்படத்தில் கேங்ஸ்டராக நடித்தார். அதன் பிறகு சண்டக்கோழி திரைப்படத்தில் வில்லி ஆனார். சர்கார் திரைப்படத்தில் கோமளவல்லியாக மிரட்டியமையும் குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net