போதைப்பொருள் பாவனையினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

போதைப்பொருள் பாவனையினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கனடாவில் போதைப்பொருள் பாவனையினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனேடிய ஆய்வு நிறுவனம் ஒன்றினை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 993 பேர் போதைப்பொருள் பாவனை காரணமாக உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், இதுவரையான காலப்பகுதியில் கனடாவில் சுமார் 8 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 94 சதவீதமானவர்கள் விபத்துக்களினால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த விபத்துக்களுக்கு அதிகரித்த போதைப்பொருள் பாவனையே காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net