இலங்கையிலிருந்து 750 சிசுக்கள் சுவிட்சர்லாந்திற்கு கடத்தல்!
போலிப் பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தி 750 சிசுக்கள் சுவிட்சர்லாந்திற்கு கடத்தப்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒலிவ் ரம்யா என்ற யுவதி சுவிட்சர்லாந்திலிருந்து தனது மெய்யான பெற்றோரைத் தேடி இரத்தினபுரிக்கு வந்த போது மேற்கொண்ட விசாரணைகளின் போது இந்த மோசடிகள் அம்பலமாகியுள்ளன.
குறித்த யுவதியின் பிறப்புச் சான்றிதழ் வைத்தியசாலையில் பதியப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவ மனைகளில் சிசுக்கள் கொல்லப்பட்டதாக தாய்மாரிடம் கூறி வெளிநாடுகளில் அந்த சிசுக்களை வளர்ப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்திற்கு சிசுக்களை கடத்தும் நடவடிக்கைகளை எலிஸ் நோதிகர் என்ற பெண் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
1981ம் ஆண்டில் நோதிகர் என்ற பெண், ஒலிவ் ரம்யாவை சுவிட்சர்லாந்து நாட்டவர்களுக்கு பணத்திற்கு விற்பனை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.