வரவு- செலவுத் திட்டம் – 2019 #Budget2019

வரவு- செலவுத் திட்டம் – 2019 #Budget2019

தற்போதைய அரசாங்கத்தின் ஐந்தாவது வரவு-செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டது.

நிதியமைச்சர் மங்கள சமரவீர வரவு-செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து ஆற்றிய உரையில் மேற்படி விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

  • விசேட தேவையுடையவர்களுக்கு 3000 வழங்கப்படுகிறது. அதனை 5000-மாக அதிகரித்து, குறைந்த வருமானம் பெரும் 72 ஆயிரம் பேருக்கு வழங்க 4300 மில்லியன் ஒதுக்கப்படடுள்ளது.
  • சூதாட்ட விடுதிகளுக்கான அனுமதி கட்டணம் 400 மில்லியன் ரூபாயாக அதிகரிப்பு – சூதாட்ட விடுதிக்கான நுழைவு கட்டணம் 50 அமெரிக்க டொலரினால் அதிகரிப்பு.
  • கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் அதிகரிப்பு. ஒருநாள் சேவை 5 ஆயிரம் ரூபாயாகவும், வழமையான சேவை 3500 ரூபாயாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.
  • சிகரெட்டின் விலை ஜுன் முதலாம் திகதி முதல் 5 ரூபாயினால் அதிகரிப்பு
  • போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பனை அபிவிருத்தி நடவடிக்கைக்கு 5 மில்லியன் ஒதுக்கீடு.
  • மடு தேவாலய அபிவிருத்திக்கு 200 மில்லியன் ருபாய் ஒதுக்கீடு
  • கம்பெரலிய திட்டத்தின் கீழ் சமய வழிபாட்டுத்தளங்களை அபிவிருத்தி செய்ய 1 மில்லியன் ரூபாய்
  • இயற்கை அனர்த்த முகாமைத்துவ வேலைத்திட்டத்துக்காக 20,000 மில்லியன் ருபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் செப்டெம்பர் 1 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்வது கட்டாயம்
  • இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை வலுப்படுத்த 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது – மேலும் கிராம சக்தி வேலைத்திட்டத்துக்காக 500 மில்லியன்.
  • சமுர்த்தி திட்டம் மறுசீரமைக்கப்படும் அதற்காக 6 இலட்சம் புதிய பயனாளிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்கென 10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • குடிநீர் திட்டத்துக்காக 45,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • இராணுவ கொடுப்பனவு அதிகரிக்கப்படும் அதில் கட்டளை தளபதிகளுக்கு கொடுப்பனவு 5000 ரூபாய் வழங்கப்படும் – வாடகைக் கட்டணம் 100% அதிகரிக்கப்படும். சீருடை கொடுப்பனவு அதிகரிக்கப்படும்.
  • அரச ஊழியர்களுக்கான சம்பளம் ஜுன் முதல் 2500 ரூபாயினால் அதிகரிப்பு.
  • அதிக வசதிகளையுடைய ரயில் சேவைக்காக 4 புதிய ரயில் பாதைகள் அமைக்ககப்படவுள்ளன. அதில் மாலபே – கொழும்பு இலகு ரயில் பாதைக்காக 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ஓய்வூதிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சரி செய்ய 12 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
  • யாழ்ப்பாணம் பழைய நகர சபையை புனரமைப்பு செய்ய 700 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.
  • அரச ஊழியர்களின் சம்பள உயர்விற்கென 40 பில்லியன் ஒதுக்கீடு. ஜுலை முதலாம் திகதி முதல் மேலும் 2 ஆயிரத்து 500 ரூபாய் கொடுப்பனவு
  • மேல் மாகாணம் மத்திய மாகாணங்களில் பேருந்து சேவைகளுக்கு முற்கொடுப்பனவு அட்டைகள் மற்றும் GPS சேவைகள் ஆரம்பிக்கப்படும்.
  • பொது போக்குவரத்து சேவை அபிவிருத்தி செய்யப்பட்டவுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் பேருந்து சேவை அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
  • அருவக்காடு கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்துக்கு 7000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • போகம்பரை சிறைச்சாலை பொது இடமாக அபிவிருத்தி செய்ய 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
  • தேசிய ஒலிம்பிக் நிதியத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
  • பல்கலைக்கழக உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு 25,000 மில்லியன்
  • ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் நிறுவப்படும்
  • சுகாதார துறையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களுக்காக 24,750 மில்லியன் ருபாய் ஒதுக்கீடு
  • இலங்கையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு உலகில் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர வாய்ப்பு.
  • கொலன்னாவ மற்றும் அலுவிகார விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்ய 300 மில்லியன் – விளையாட்டுத்துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இலவச பயிற்சிகளை வழங்க நடவடிக்கை
  • கல்வித் துறைக்கு 32 ஆயிரம் மில்லியன் ரூபாய் – தகவல் தொழிநுட்ப சேவை தொழிற்றுறைக்கு கலைப்பட்டத்தாரிகளை இணைத்துக்கொள்வதற்காக 1300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
  • சுற்றுலாதுறையில் பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்களுக்கு வௌிநாட்டு நாணய பற்றுச்சீட்டுகளுக்கு NBT நீக்கம்.
  • சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களுக்கு கைவினைப் பொருட்களை செய்யும் மத்திய நிலையம் தொம்பே கிராமத்தில் அமைக்கப்படவுள்ளது அதற்காக 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • முதல் முறையாக வீடு கொள்வனவு செய்யவுள்ள நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கு 10 மில்லியனுக்கும் அதிகமான சலுகை கடன்கள் வழங்கப்படும்.
  • 25 ஆண்டுகளில் மீளச் செலுத்தும் வகையில் 6 வீத வட்டிக்கு சலுகை கடன் வழங்கப்படவுள்ளது.
  • வடக்கில் யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீள் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • சிறைச்சாலை திணைக்களத்துடன் இணைந்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டவர்களை அதிலிருந்து மீட்கும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
  • தனியார் நிறுவனங்களும் பிரசவ விடுமுறையை 3 மாத காலம் வழங்கும் வகையில் வழிவகைகளை செய்தல்.
  • 25 வருடங்களில் செலுத்தக் கூடிய வகையில் 6 சதவீத வட்டி அடிப்படையிலான இலகுக் கடன் திட்டங்களை இளம் திருமண தம்பதிகளுக்கு வழங்க நடவடிக்கை.
  • சிறுநீரக நோயாளர்களுக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்க – 1,480 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விசேட தேவையுடையவர்களுக்கு வழங்கப்படும் 3 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை 5 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து, குறைந்த வருமானம் பெரும் 72 ஆயிரம் பேருக்கு வழங்க 4 ஆயிரத்து 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படடுள்ளது.
  • 3 மாதங்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்படும்.
  • பல்கலைக்கழக மாணவர்களின் 50% – 30%மாணவர்களே தொழிலாளர்கள்.. வேலைத்தளத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பருத்தித்துறை மற்றும் பேசாலையில் மீன்பிடி துறைமுகங்களை அமைப்பதற்கு 1300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து வீடுகளுக்கும் கழிவறை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க 4 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரதான பேருந்து நிலையத்திலும் ரயில் நிலையத்திலும் புதிய கழிவறைகள் நிர்மாணிக்கப்படும்.
  • பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைத் தொடர்பில், தேயிலை சபையுடன் கலந்துரையாடி விரைவானத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை
  • கறுவா ஏற்றுமதியின் போது தகுதிச்சான்றிதழ் பெறல் கட்டாயம். அதன் சர்வதேச அங்கீகாரத்தை உறுதி செய்ய விசேட நிதி ஒதுக்கீடு.
  • சிறிய டிரக் வாகனம் மீதான உற்பத்தி வரி நீக்கம்.
  • இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா திட்டத்தை விரிவுபடுத்த 500 மில்லயின் நிதி ஒதுக்கீடு.
  • இறப்பர் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கு 800 மில்லியன் நிதி ஒதுக்கீடு.
  • கடந்த காலங்களில் விவசாயத்தில் பெறப்பட்ட பாரிய இழப்பை ஈடுசெய்ய விசேட களஞ்சியப்படுத்தல் இடங்களுக்கு நிதி ஒதுக்கீடு.. அதனை ஊக்குவிக்க 250 பில்லியன் ஒதுக்கப்படும்
  • சிறிய மற்றும் மத்திய தர வர்த்தகர்களை ஊக்குவிக்க நடவடிக்கை.
  • பல ஏற்றுமதி வரிகள் 2019 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.
  • என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த நடவடிக்கை. இதன் மூலம் கடன் வசதிகளை வழங்கவும் நடவடிக்கை. அத்தோடு 1925 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல்களை பெறலாம்.
    வரவு-செலவு திட்ட அறிக்கையுடன் நிதியமைச்சர் நாடாளுமன்றை வந்தடைந்தார்

பாராளுமன்ற அமர்வு நாளை புதன்கிழமை காலை 9 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net