புலிகளுடனான யுத்தத்தில் வெள்ளை வான் கலாசாரம்!
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய செயற்பாடுகளை ஒழிப்பதற்கு அப்போது, பல புலனாய்வு அமைப்புகள் பணியாற்றின, சிலர் கூறுவது போன்று, எமது அரசாங்கத்தில், வெள்ளை வான் கலாசாரம் இருக்கவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அண்மையில் கண்டியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
போரின் இறுதிக்கட்டத்தில் தனது கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கைகள் அனைத்தும் சட்டபூர்வமானவையாகவே இருந்தன.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய செயற்பாடுகளை ஒழிப்பதற்கு அப்போது, பல புலனாய்வு அமைப்புகள் பணியாற்றின.
அந்த காலத்தில் புலனாய்வு அமைப்புக்களின் செயற்பாடு மற்ற நாடுகளில் இருந்து வேறுபட்டதாக இருக்கவில்லை.
சிலர் கூறுவது போன்று, எமது அரசாங்கத்தில், வெள்ளை வான் கலாசாரம் இருக்கவில்லை.
என்னைப் பற்றியும் எனது சகோதரர் மகிந்த ராஜபக்சவைப் பற்றியும் முஸ்லிம்களுக்கு எதிரான தேசியவாதிகள் என்று தவறான படத்தைக் காண்பிக்க சிலர் முற்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.