ஜனாதிபதியின் நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்க தயாராகும் ஐ.தே.கட்சி.
2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்க 50 முதல் 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்முடன் இணைந்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் உள்ள பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டை தவிர ஜனாதிபதியிடம் இருக்கும் ஏனைய துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்க போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
முதலில் இந்த நிலைப்பாட்டில் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். தற்போது 50 முதல் 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிலைப்பாட்டில் உள்ளனர்.
அத்துடன் ஜனாதிபதியின் நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்கும் விடயத்தில் சில அமைச்சர்களின் ஆதரவு கிடைத்துள்ளது எனவும் விதானகே குறிப்பிட்டுள்ளார்.