107 வீதமாக உயரும் அரசாங்க ஊழியர்களின் சம்பளம்!

107 வீதமாக உயரும் அரசாங்க ஊழியர்களின் சம்பளம்!

2020ம் ஆண்டில் அரசாங்க ஊழியர்களின் சம்பவம் 107 சதவீதமாக மாறும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

சிறந்த வரவு செலவுத் திட்டமொன்றை சமர்ப்பித்தது தொடர்பில் பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

நடப்பாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் 14 இலட்சம் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் 2500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளன. 2020 இல் அரச ஊழியர்களின் சம்பளம் 107 வீதத்தினால் உயரும் எனத் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net