நாட்டின் தலைவர் அரசாங்கத்திற்கு தடைகளை ஏற்படுத்துகிறார்!
நாட்டின் தலைவர் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தடைகளை ஏற்படுத்தி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆசி வழங்காத நாட்டின் தலைவர், அரசாங்கம் ஊழல் செய்கிறது என்ற தவறான தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்.
இதனால், நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பை நாட்டின் தலைவர் புரிந்துக்கொள்ள வேண்டும். தான் கூறுவதை அமைச்சர்கள் ஏற்றுக்கொள்வதில்லை என ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஜனாதிபதி இப்படி தொடர்ந்தும் செயற்பட்டால், அவர் கூறுவதை எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அத்துடன் ஜனாதிபதி, பொலன்நறுவை மாவட்டத்தின் அபிவிருத்திக்காக மட்டும் பெருந்தொகை பணத்தை ஒதுக்குவது அநீதியானது எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.