பிரித்தானியாவில் மிக திறமையான சிறுமி விருதை பெற்ற இலங்கை சிறுமி.
சிறுமிகளில் மிக திறமையான சிறுமி என்ற விருதை பிரித்தானியாவில் வசித்து வரும் இலங்கை சிறுமி ஒருவர் பெற்றுள்ளார்.
இந்த விருது கடந்த வார இறுதியில் 12 வயதான நிஷி உக்கல்ல என்ற சிறுமிக்கு வழங்கப்பட்டுள்ளது.
செனல் 4 தொலைக்காட்சி தயாரித்து வழங்கும் “Child Genius” என்ற நிகழ்ச்சி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் வசித்து வரும் பல இனங்களை சேர்ந்த சிறுமிகளை இலகுவாக தோற்கடித்து இந்த வெற்றியினை பெற்றுள்ளார்.
இந்த சிறுமியிடம் பிரித்தானியாவில் உள்ள பல ஊடகங்கள் நேர் காணலை நடத்தியுள்ளதுடன், பிரித்தானியாவில் பிரபலமாகியுள்ளார்.
அடிக்கடி ஊடகங்கள் நேர்காணலை நடத்துவதன் காரணமாக சிறுமியின் தந்தைக்கு தொழில் விடுமுறை பெற நேரிட்டுள்ளது.
இலங்கையில் பிறந்து பிரித்தானியாவில் குடியேறிய நிலங்க உக்கல்ல மற்றும் சிரோமி ஜயசிங்க ஆகியோர் இந்த சிறுமியின் பெற்றோர்களாவர்.
பிரித்தானியாவில் பிறந்த நிஷிக்கு பிரித்தானிய குடியுரிமையும், இலங்கை குடியுரிமையும் உள்ளது.
முன்பள்ளி ஆசிரியர்கள் ஏனைய பிள்ளைகளை விட நிஷியிடம் வித்தியாசம் தெரிவதாக கூறிய பின்னரே தனது மகளின் திறமையை தான் முதலில் அறிந்துக்கொண்டதாக சிரோமி ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
மகளின் இருக்கும் திறமை காரணமாக அவருக்கு கற்பிக்க முன்பள்ளிக்கு புதிய ஆசிரியரை நியமிக்க நேர்ந்ததாக சிறுமியின் தந்தை கூறியுள்ளார்.
அத்துடன் பாடசாலையில் 4 ஆம் வகுப்பு படிக்க வேண்டிய வயதில் 6 ஆம் வகுப்பில் படித்ததாகவும் ரிப்பல் பிரமோஷன் பெற்று 6 ஆம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் திறமையான சிறுமி என்ற விருதை பெற்று கொண்ட பின்னர், நிஷி உக்கல்லவுக்கு பல நாடுகளில் இருந்து பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.
10 வயதிலும் நிஷி உக்கல்ல முக்கிய வெற்றியை பெற்றதையும் சிலர் நினைவூட்டியுள்ளனர். 10 வயதில் அவர் அதி கூடிய புள்ளியான 162 புள்ளிகளை பெற்றுக்கொண்டதாக அஜிதா கதிர்காமர் என்ற பெண் கூறியுள்ளார்.