தொல்பொருட்களை சேதப்படுதினால் 5 இலட்சம் அபராதம்!

தொல்பொருட்களை சேதப்படுதினால் 5 இலட்சம் அபராதம் – அமைச்சரவை அனுமதி!

தொல்பொருட்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு விதிக்கப்படும் தண்டப்பணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பி. மண்டாவல இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொல்பொருட்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய தண்டப்பணம் 50,000 முதல் 5 இலட்சமாக அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொல்பொருட்களுக்கு சேதம் விளைவிப்பவர்ளுக்கு வழங்கப்படும் சிறைத்தண்டனையையும் 2 வருடங்களிலிருந்து 5 முதல் 15 வருடங்களாக அதிகரிக்கப்படவுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net