அப்படி சொன்னால் என்னிடம் அடிவாங்கத் தயாராக வேண்டும்!

அப்படி சொன்னால் என்னிடம் அடிவாங்கத் தயாராக வேண்டும்!

நான் இறந்தாலும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையமாட்டேன். அப்படி யாரும் இனிமேல் இணைத்துப் பேசினால் என்னிடம் அடி வாங்கத் தயாராக இருங்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க காட்டமாக தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் சர்வதேச மகளிர் தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் பேசிய அவர்,

நான் ஐக்கிய தேசிய கட்சிக்கு சென்றுவிட்டதாக சிலர் என்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள். நான் ஒன்றைக் கூறிக் கொள்கிறேன். இறந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்குச் செல்லமாட்டேன்.

இன்று இப்படி நான் தெரிவித்த பின்னரும் நான் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இருப்பதாக யாராவது தொடர்புபடுத்திப் பேசினால் என்னிடம் அடிவாங்கத் தயாராக இருங்கள் என்று காட்டமாக குறிப்பிட்டார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்நிகழ்விற்கு வருவதற்கு முன்னர் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சந்திரிக்கா, ஜனாதிபதி வருகை தரும்போது வெளியேறிச் சென்றதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net