இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது.
ரி 56 ரக துப்பாக்கிக்கான தோட்டக்களை பயன்படுத்தக்கூடிய இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹியங்கனை – அளுத்தெட்டியாவ பிரதேசத்தில் வைத்து இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து 24 தோட்டக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இந்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மஹியங்கனை பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.