தென்னிலங்கையில் அதிசொகுசு காருக்குள் சிக்கிய ஆபத்தான பொருள்!

தென்னிலங்கையில் அதிசொகுசு காருக்குள் சிக்கிய ஆபத்தான பொருள்!

அம்பலங்கொடையில் சொகுசு மோட்டார் வாகனத்தில் பெருந்தொகை போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்னர்.

ஒரு கிலோ 65 கிராம் போதைப்பொருளுடன் பயணித்து கொண்டிருந்த இருவர் காலி போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரினால் மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 12 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும்.

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் வர்த்தகர் எனவும் மற்றைய நபர் ஓய்வு பெற்ற அதிபர் எனவும் தெரியவந்துள்ளது.

குறித்த ஓய்வு பெற்ற அதிபர் 68 வயதுயடைவர் எனவும் அவரது சகோதரர் ஒருவர் போதை பொருள் வர்த்தகம் தொடர்பில் களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

43 வயதான மற்றைய நபர் வாடகை அடிப்படையில் வாகனம் வழங்குபவர் என குறிப்பிடப்படுகின்றது.

காலி மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் இதுவாகும். சந்தேக நபர்கள் இன்றைய தினம் பலப்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இலங்கையில் போதைப்பொருள் ஆபத்து நிறைந்ததாக ஜனாதிபதியினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 4400 Mukadu · All rights reserved · designed by Speed IT net