மலையகப் பகுதியில் புலிகள், சிறுத்தைகள் இறப்பு வீதம் அதிகரிப்பு

மலையகப் பகுதியில் புலிகள், சிறுத்தைகள் இறப்பு வீதம் அதிகரிப்பு

மலையகத்தை உள்ளடக்கிய சில பகுதிகளில் கடந்த சில காலமாக புலிகள் மற்றும் சிறுத்தைகள் இறந்து வருவது அதிகரித்துள்ளது.

இது தொடர்பில் வன இலக்கா மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் கவனம் செலுத்தவேண்டும் என சுற்று சூழல் பாதுகாப்பு சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இவ்வருட முதற்காலப்பகுதியில் திம்புள்ள பத்தன பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் மவுண்வேணன் தோட்டத்தில் 4 அடி நீளமான ஒரு புலி ஒன்று இறந்துள்ளது. அவ்வாறு இறந்த புலி காட்டு பண்டிகளுக்கென வைக்கப்பட்ட பொறியில் சிக்கி இறந்துள்ளதாக சுற்று சூழல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் மலையக பகுதியை அன்டியுள்ள வனபகுதிகளில் புலி மற்றும் சிறுத்தைகள் வருடாந்தம் 10 தொடக்கம் 20 இற்கு இடையில் இவ்வாறு இறப்பதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

அவர் மேலும் கூறுகையில் இவ்வாறான புலி சிறுத்தைகளினால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கிராம பகுதி மக்கள் தாக்கப்பட்டு படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் ஒரு சிலர் இறந்தும் உள்ளனர்.

இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான உயிரிழப்பையும் படுகாயமடைவதையும் தடுப்பதற்காக வனத்துறையினர் முறையான நடவடிக்கை மேற்கொள்வதில்லை என பெருந்தோட்ட துறையை சேர்ந்தவர்களும்ரூபவ் கிராமவாசிகளும் புகார் தெரிவிக்கின்றனர்.

மலைநாட்டு பகுதியில் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் போது பிரதான நெடுஞ்சாலைகளில் புலி மற்றும் சிறுத்தைகள் பாய்ந்து செல்வதை கண்ணூடாக காணக்கூடியதாக உள்ளது.

ஒரு சில நேரங்களில் வாகனங்களில் அடிப்பட்டு புலிகள் மற்றும் சிறுத்தைகள் இறப்பதும் உண்டு என சூற்று சூழல் சங்கம் தெரிவிக்கின்றது

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net