ஐ.தே.மு. வின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர், தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது.
எனினும் தற்போது அந்த வேட்பாளரின் பெயரை வெளியிடமுடியாது என்றும் அதன் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
“ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள கட்சிகள் இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளன.
எனினும் தற்போது வேட்பாளரின் பெயரை வெளியிடமுடியாது. மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணங்கியுள்ளார்” என்றும் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.