வீசா இன்றி இலங்கை வர பல நாடுகளுக்கு வாய்ப்பு.
சுற்றுலா அடிப்படையில் இலங்கை வரும் பல நாடுகளுக்கு வீசா விலக்களிப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சுற்றுலா நடவடிக்கைகளுக்காகவும் பௌத்த மத விடயங்களுக்காகவும் இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.
கடுவெல விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
அதற்கமை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.