ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான அழுத்தங்கள் குறையும்!
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான அழுத்தங்கள் குறைவடைவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெஹான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த 2015 வழங்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக இம்முறை இலங்கை அரசாங்கத்தினால் இருவேறு நிலைப்பாடுகள் முன்வைக்கப்படவுள்ளன.
எனவே இந்த நிலைமையில் இலங்கைமீது சர்வதேசம் அதிகமான அழுத்தங்களைப் பிரயோகிக்க வாய்ப்பில்லை. இலங்கையிடமிருந்து இருவேறுபட்ட நிலைப்பாடுகள் வெளிப்படுத்தப்படும் சூழ்நிலையானது, சர்வதேச சமூகத்திற்கு இலங்கையில் காணப்படும் குழப்பநிலையினை வெளிப்படுத்தும்.
எனவே இந்தச் சூழ்நிலையானது இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்களைக் குறைப்பதற்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆகவே கடந்த ஜெனீவாத் தீர்மானங்களை தீவிரமாக நடைமுறைப்படுத்துமாறு சர்வதேசம் தனது கடுமையான அழுத்தங்களைப் பிரயோகிக்கமாட்டாது” என ஜெஹான் பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.