நாட்டு மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!

நாட்டு மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்வலு மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் நிலவி வரும் வரட்சியான காலநிலை காரணமாக நாளாந்த மின்சார உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால் மின்சார தேவை அதிகரித்துள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்சன ஜயவர்தன கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

ரந்தெனிகல, ரன்டம்பே உள்ளிட்ட நீர்மின் உற்பத்திக்கான நீரேந்து பகுதிகளின் நீர்மட்டம் 39 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீர் மட்டம் வீழ்ச்சியடைந்த போதிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் அளவிற்கு இன்னமும் நிலைமை மோசமடையவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தேவையற்ற மின் குமிழ்கள் ஒளிர்வதனை நிறுத்தி இலங்கை மின்சாரசபைக்கு உதவுமாறு கோரியுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net