விடுதியில் உல்லாசம் -16 வயது சிறுமி கைது!

விடுதியில் உல்லாசம் -16 வயது சிறுமி கைது!

குருநாகல் – தம்புள்ள பிரதான வீதியில் படகமுவ பகுதியிலுள்ள விடுதியொன்றில் 16 வயதான சிறுமியும், 38 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் விடுதியில் முகாமையாளராக செயல்பட்டு வந்த 17 வயதான இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டத்தை வலுப்படுத்தும் பிரிவால் கடந்த 9 ஆம் திகதி மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சிறுமி கெக்கிராவ பகுதியை சேர்ந்தவர் எனவும், அவருடன் கைது செய்யப்பட்ட 38 வயதானவர் குருநாகல் பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமி இதற்கு முன்னரும் பல முறை குறித்த நபருடன் விடுதிக்கு வந்து சென்றுள்ளமை தெரியவந்துள்ளதாக சட்டத்தை வலுப்படுத்தும் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net