இலங்கையில் நடந்த கொடுமை! பெண்களே அங்கு செல்லாதீர்கள்!

இலங்கையில் நடந்த கொடுமை! பெண்களே அங்கு செல்லாதீர்கள்!

இலங்கை வந்த அமெரிக்க பெண் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சர்வதேச மகளிர் தினமான கடந்த மார்ச் மாதம் 08ஆம் திகதி மிரிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து குறித்த பெண் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தான் துஷ்பிரயோகத்திற்குள்ளானதாக அமெரிக்க நாட்டு பெண் ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

கெரன் என்ற பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் “கடந்த 8ஆம் திகதி இரவு எனது நண்பருடன் கோப்பி அருந்திக் கொண்டிருந்தேன். இதன்போது அவ்விடத்திற்கு வந்த நபர் ஒரு திடீரென என எனது அந்தரங்க உறுப்பை பிடித்துவிட்டார். அந்த சந்தர்ப்பத்தில் கோப்பி கடையில் இருந்த அனைவரும் அதனை பார்த்தார்கள். இதன் போது எனக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் போய்விட்டது.

என் மீது பாலியல் சேட்டையில் ஈடுபட்ட நபர் குடிபோதையில் இருந்தார். இதனால் அவரை மன்னிக்க வேண்டும் என அருகில் இருந்தவர்கள் குறிப்பிட்டார்கள். அந்த சந்தர்ப்பத்தில் பாலியல் சேட்டையில் ஈடுபட்டவர் முச்சக்கர வண்டியில் ஏறி தப்பிச் செல்ல முயற்சித்தார். எனினும் நானும் எனது நண்பரும் அதே முச்சக்கர வண்டியில் ஏறி தப்பி செல்ல முடியாத வகையில் அவரை பிடித்து கொண்டோம்.

பின்னர் சம்பவம் தொடர்பில் அருகில் பயணித்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு அறிவித்தோம். சந்தேக நபரையும் பொலிஸ் அதிகாரிகள் இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு முச்சக்கர வண்டியில் அழைத்து சென்றோம். அதற்காக 700 ரூபாய் முச்சக்கர வண்டி கட்டணம் அறவிடப்பட்டது.

இந்த சம்பவத்தில் பொலிஸாரின் செயற்பாடு தொடர்பில் திருப்தியடைய முடியவில்லை. தனது தொலைபேசி இலக்கங்கள் மற்றும் அமெரிக்க வீட்டு விலாசம் போன்றவற்றை பொலிஸார் பெற்றுக் கொள்ளாமல் இரண்டாம் தரப்பு நபர் ஒருவரே பெற்றுக் கொண்டார்.

பொலிஸார் என கூறி நபர் ஒருவர் எனக்கு அழைப்பேற்படுத்தி சந்திக்க வருமாறு அழைத்தார். பொலிஸ் அதிகாரியை சந்திக்க சென்ற போது சிவில் உடையில் இருந்த நபர் பொலிஸ் அதிகாரி அல்ல என தெரிந்த பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டேன். அது தொடர்பில் பொலிஸாரிடம் தெரியப்படுத்தினேன்.

எப்படியிருப்பினும் இந்த முழுமையான சம்பவத்தை பார்க்கும் போது இலங்கைக்கு சுற்றுலா பயணம் செல்லும் போது அவதானமாக இருக்க வேண்டும். எனக்கு நடந்த துன்புறுத்தல் போன்று வேறு பெண்களுக்கும் நடந்திருந்தால் அச்சப்படாமல் சட்டத்திற்கு முன் செல்ல வேண்டும்” என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

My experience being sexually harassed in Mirissa, Sri LankaOn March 8, 2019, which ironically was International…

Posted by Karen Hsin on Sunday, March 10, 2019

 

Copyright © 7150 Mukadu · All rights reserved · designed by Speed IT net