திருகோணமலை, பலாலி, மத்தள விமான நிலையப் பகுதிகள் வெளிநாடுகளிடம்!
திருகோணமலைத் துறைமுகம், பலாலி விமான நிலையம் மற்றும் மத்தள விமான நிலையங்களை வெளிநாடுகளுக்கு குத்தகை எனும் பெயரில் விற்றுவிட்டனர் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச
2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
திருகோணமலைத் துறைமுகம், பலாலி விமான நிலையம் மற்றும் மத்தள விமான நிலையங்களை வெளிநாடுகளுக்கு குத்தகை எனும் பெயரில் விற்றுவிட்டனர்.
அதிலும் இந்த அரசாங்கம் கொழும்புத்துறைமுகத்தில் தனி வர்த்தக வலயமொன்றை அமைக்க அமெரிக்காவுக்கு இடமளித்துள்ளது.
மத்தள விமான நிலையத்தில் 70 வீத பங்கினை இந்தியாவிற்கு வழங்கும் அனுமதியை இலங்கை அரசாங்கம் கொடுத்துவிட்டது.
இந்த அரசாங்கம், எமது நாட்டிற்கேயுரிய இயற்கை வளங்களையும் சொத்துக்களையும் விற்றுவிட்டு மீண்டும் சர்வதேச நாடுகளிடம் கடன் வாங்கும் நிலைக்குச் செல்லப்போகின்றது என்றார்.