பெண்களை குறி வைக்கும் கும்பல் தொடர்பான தகவல் அம்பலம்!

கொழும்பில் பெண்களை குறி வைக்கும் கும்பல் தொடர்பான தகவல் அம்பலம்!

கொழும்பில் பெண்களை இலக்கு வைத்து கொள்ளையடிக்கும் 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் செல்லும் இந்த கொள்ளை கும்பல், வீதிகளில் நடந்து செல்லும் பெண்களின் தங்க சங்கிலி, கைப்பைகள், கையடக்க தொலைபேசி போன்றவற்றை கொள்ளையடித்து செல்கின்றனர்.

அந்த கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டதாக மிரிஹான விசேட குற்ற விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் 7 கையடக்க தொலைபேசிகள், கைப்பைகள் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சுமார் 40 பெண்கள் நுகேகொடை பொலிஸ் பிரிவுகளில் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய இந்த கும்பல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net