யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாணத்தில் நாளைய தினம் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இந்நிலையில், அநுராதபுரம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 34 பாகை செல்சியஸ் வெப்பநிலையும், கண்டி மற்றும் மன்னாரில் 33 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் இன்று பதிவாகியுள்ளன.
கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் 32 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் மட்டக்களப்பு மற்றும் காலி மாவட்டங்களில் 31 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளன.
இதேவேளை அதிகளவான வெப்பம் பாடசாலை மாணவர்கள், பொது மக்கள் என அனைவருக்கும் உடல் நிலையில் பாதிப்புக்கள் ஏற்பட கூடும் என வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆகையினால், அதிகளவில் நீர் அருந்துமாறும் சிறுவர்கள், முதியோர் மற்றும் நோயாளர்கள் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அவசர மருத்துவ உதவிகளுக்காக 1990 என்ற அவசர அம்பியூலன்ஸ் இலக்கத்துடன் தொடர்புகொண்டு சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்” எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.