பிரியங்கா பெனாண்டோக்கு எதிரான வழக்கில் அரசியல் அழுத்தத்தை எதிர்த்தும் அவனை கைது செய்ய வேண்டும் எனக்கூறி போராட்டம்.
பிரியங்கா பெனாண்டோக்கு எதிரான வழக்கில் அரசியல் அழுத்தத்தை எதிர்த்தும் அவனை கைது செய்ய வேண்டும் எனக்கூறி போராட்டம் இடம் பெற்று வருகிறது
04 Feb 2018 அன்று அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் மற்றும் பிரித்தானிய பிரஜைகளுக்கு சைகை மூலம் கொலை மிரட்டல் விடுத்த Brigadier Priyanka Fernandoவை பிரித்தானிய பொலீஸ் கைது செய்ய தவறியது.
எனினும் International Centre for Prevention and Prosecution of Genocide (ICPPG) அமைப்பால் முன்னேடுக்கப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என்று Westminster நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, அவரை கைது செய்ய பிடியாணையும் வழங்கியிருந்தது.
ஆனால், இலங்கை அரசு கொடுத்த அழுத்தத்தின் அடிப்படையில், FCO ஊடாக சட்டத்துக்கு முரணாக இந்த விடயத்தில் தலையீடு செய்யப்பட்டு இந்த பிடியாணை இரத்து செய்யப்பட்டுள்ளது. இது பிரித்தானிய நீதிதுறையின் நடுநிலைமையை கேள்விக்குறியாக்கி உள்ளது.
இதை எதிர்த்து ICPPG மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கிற்கான எமது ஆதரவை காட்டும் முகமாக, நீதிமன்றத்திற்கு வெளியில் ஒரு அமைதிப்போராட்டம் நடைபெற்று வருகிறது.
பிரித்தானிய நீதித்துறையில் அரசியல் தலையீட்டை எதிர்ப்போம்!