கட்சியில் இருந்து சந்திரிக்காவை ஒதுக்கினார் மைத்திரி!
ஜனாதிபதி தன்னை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த காரணங்களால் சுதந்திர கட்சியில் நடக்கும் விடயங்கள் தனக்கு தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
எம்பிலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் கருத்துரைக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“திருடர்கள், கொலையாள் மற்றும் மோசமான வேலைகளுக்கு எதிராக செயற்படுவதால், தன்னை கட்சிப் பணிகளில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளனர். நான் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலேயே இருக்கின்றேன்.” என கூறியுள்ளார்.