மசூதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் கடுமையான கண்டனம்!
நியூசிலாந்தில் உள்ள மசூதிகள் இரண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள மிகவும் மோசமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவதிற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
துப்பாக்கிதாரி ஒருவர் சமூக வலைத்தளங்கள் ஊடாக தனது செயலை நேரடியாக ஒளிபரப்புச் செய்தவாறு மேற்கொண்ட இந்த பாரதூரமான தாக்குதலில் குறைந்தது 49 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான நிலையில் குறித்த இந்தச் சம்பவம் தொடர்பாக டுவிட்டர் ஊடாக தனது கண்டனத்தை வெளியிட்டுள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “மக்கள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளமை மிகவும் பாரதூரமான ஒரு செயல்.
இந்த கொடூரமான சம்பவத்தினால் துயருற்றிருக்கும் நியூசிலாந்து மக்களுடனும், உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய சமூகத்தினருடனும் கனேடியர்களும் இணைந்து கொள்வதாகவும்|” அதில் குறிப்பிட்டுள்ளார்.