ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையருக்கு அடித்த அதிர்ஷ்டம்!
ஐரோப்பிய நாடான இத்தாலியில் இலங்கையர் ஒருவருக்கு பெரும் அதிர்ஷ்டம் அடித்துள்ளதுள்ளாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இத்தாலியில் இடம்பெற்ற தொலைகாட்சி நிகழ்ச்சியில் இலங்கையர் ஒருவர் 150000 யூரோ பணப்பரிசை வென்றுள்ளார்.
“உங்களில் யார் அடுத்த மில்லியனர்?” என்ற போட்டியிலேயே அவர் இந்த பணப்பரிசை வென்றுள்ளார்.
அவர் மொத்தமாக 13 கேள்விகளுக்கு சரியான பதிலளித்ததன் மூலம் இந்த பணத்தை தொகையை வென்றுள்ளார் என இத்தாலி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட மசுப் லிதிப், இத்தாலியில் வைத்தியராக பணியாற்றி வருகின்றார்.
1979ஆம் ஆண்டு அவரது குடும்பத்தினர் இத்தாலிக்கு சென்றுள்ளனர்.
29 வயதான மசுப் இந்த போட்டியில் கலந்து கொண்டு 13 கேள்விகளுக்கும் சரியாக பதிலளித்துள்ளார். அதற்கமைய அவர் 150000 யூரோ பணப்பரிசுக்கு சொந்தக்காரராகியுள்ளார்.
அந்த பணத்தொகை இலங்கை பெறுமதியில் 3 கோடி ரூபாவாகும்.