பெரும்திரளான தமிழ் மக்கள் கூட்டத்தின் மத்தியில் சர்ச்சைக்குரிய ரவீந்திர விஜேகுணவர்தன!
வரலாற்று பிரசித்திப்பெற்ற கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா நேற்றைய தினம் வெகு கோலாகலமாக இடம்பெற்றது.
இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த பெருந்திரளான பக்தர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, திருவிழா நிறைவடைந்ததன் பின்னர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவிற்கு பிரியாவிடை அளிக்கப்பட்டுள்ளது.
11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடைய ரவீந்திர விஜேகுணவர்தனவிற்கு இவ்வாறான பொது விழாக்களில் மரியாதை அளிக்கப்படுவது பலரிடத்திலும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிக பாரதூரமான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருக்கும் இது போன்ற அதிகாரிகளுக்கு பொது மேடைகளில் முக்கியத்துவம் வழங்கப்படுவது கேள்விகளை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.