நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு பாலியல் நோய்? சபையில் சர்ச்சை!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு பாலியல் நோய்? சபையில் சர்ச்சை!

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவினால் சுமத்தப்பட்டுள்ள கொக்கொய்ன் குற்றச்சாட்டு காரணமாக சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கொக்கொய்ன் பயன்படுத்தும் உறுப்பினர்கள் பட்டியலை தனக்கு வழங்கியதாக ரஞ்சன் கூறிய போதிலும் அவ்வாறான பட்டியல் தனக்கு இன்னமும் கிடைக்கவில்லை என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட விவாத தினத்தில் உறுப்பினர்களிடம் கொக்கொய்ன் சோதனை நடத்த மாட்டேன் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் இந்த குற்றச்சாட்டு மிகவும் ஆபத்தானது. இதே நிலையில் சென்றால் உறுப்பினர்கள் இருவருக்கு எயிட்ஸ் நோய் இருப்பதாகவும் கூற வாய்ப்புள்ளது.

அது மேலும் ஆபத்ததாகி விடும் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net