யுத்தம் முடிந்திராவிட்டால் உயிரிழப்புக்கள் தொடர்ந்திருக்கும்!

யுத்தம் முடிந்திராவிட்டால் உயிரிழப்புக்கள் தொடர்ந்திருக்கும்!

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவிற்கு கொண்டுவராமல் இருந்திருந்தால் உயிரிழப்புக்கள் தொடர்ந்திருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்று மொத்த சனத்தொகையில் குறிப்பிட்ட வீதத்தினர் உயிரிழந்திருப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மாத்தளை முவன்தெனிய பிரதேசத்தில் (சனிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

“பாரிய போராட்டத்தின் மத்தியிலே 30 வருட கால யுத்தம் வெற்றிக் கொள்ளப்பட்டது. ஆனால் யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினர் இன்று தண்டிக்கப்பட்டுகின்றனர்.

எமது நாட்டு இராணுவத்தினர் 9 பேருக்கு வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில நாடுகள் குறிப்பிட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி இராணுவத்தினரை நாட்டுக்குள் அனுமதிப்பதும் இல்லை. இவையனைத்தும் ஒருதலைப்பட்சமான செயற்பாடாகும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net