ரூ. 3 கோடி தங்கத்தைக் கடத்தியவர் கைது!
மூன்று கோடி ரூபா பெறுமதியான தங்கத்தைக் கடத்திய குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த ஒருவரை சர்வதேச பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இன்று (17) அதிகாலை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
கொழும்பு, அளுத்கடையைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சென்னையிலிருந்து இல. எஸ்ஜி 001 எனும் விமானத்தில் வந்த இவர், 4,000 கிராம் எடை கொண்ட 40 தங்கக்கட்டிகளை கொண்டுவந்தமை தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, சந்தேக நபரைக் கைதுசெய்த சுங்கத் திணைக்கள அதிகாரிகள், தங்கக்கட்டிகளையும் கைப்பற்றியுள்ளனர்.