2.12 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது.

2.12 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது.

கடற்படையினரினால் வழங்கிய தகவலின்படி தென் கிழக்கு கடற்படை கட்டளையின் வீரர்கள் மற்றும் அருகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், போதை மருந்து தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்கள் இணைந்து நேற்று பொத்துவில், கொட்டுயாலே பகுதியில் வைத்து 2.12 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவரை கைதுசெய்துள்ளனர்.

குறித்த கஞ்சா பொதி வீட்டில் விற்பனைக்கு தயாராக இருக்கும் போது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர்கள் பொத்துவில் பகுதிகளில் வசிக்கின்ற 39 மற்றும் 61 வயதானவர்களாக அடயாளம் காணப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட கேரள கஞ்சா பொதி மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பாக பொத்துவில் பொலிஸால் மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன்படி, இந்த ஆண்டுக்குள் மட்டும் கடற்படை நடவடிக்கைகள் மூலம் 680 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net