படையினரை காட்டிக்கொடுக்கும் அரசாங்கம்!
நாட்டை தீவிரவாத செயற்பாடுகளில் இருந்து மீட்ட படையினரை, காட்டிக்கொடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கேகாலை – கலிகமுவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இன்று உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரவாத செயற்பாடுகள் உள்ளன.
அவ்வாறானதொரு தீவிரவாத செயற்பாட்டில் இருந்து நாட்டை மீட்டுக்கொடுத்த போதிலும், அதனை பாதுகாத்துக்கொள்ள தெரியவில்லை.
அரசியல் பழிவாங்கள் மற்றும் தேர்தல்களில் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் அரசாங்கம் தற்போது இராணுவத்தினரை காட்டிக்கொடுக்கின்றதாக, மஹிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.