மாணவியை பாலியல் வல்லுறவிற்குற்படுத்திய ஆசிரியர் கைது!

மாணவியை பாலியல் வல்லுறவிற்குற்படுத்திய ஆசிரியர் கைது!

பதினைந்து வயது மாணவியை பாலியல் வல்லுறவிற்குற்படுத்திய ஆசிரியர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

மொனராகலைப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி பாடசாலையில் கல்வி கற்கும் பதினைந்து வயது மாணவியை குறித்த ஆசிரியர் பாலியல் வல்லுறவிற்குற்படுத்தியுள்ளார்.

இச் சம்பவத்தை அம்மாணவி தனது தாயிடம் முறையிடவே தாய் மாணவியுடன் ஸ்ரீபொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இந்நிநலையில் குறித்த முறைப்பாட்டையடுத்து குறித்த ஆசிரியர் இன்று பாடசாலையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிசாரின் உத்தரவின் பேரில்பாதிக்கப்பட்ட மாணவி வைத்திய பரிசோதனைக்காக மொனராகலை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென பொலிஸார் தெரிவித்தனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net