நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மின் விநியோகம் தடைப்படும் அபாயம்!
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மின்சார தடை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி, எரி சக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின், இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரம் செயலிழந்துள்ளது.
இதன் காரணமாக நேற்றைய தினம் இந்த மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
செயலிழந்த இயந்திரம் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இன்றைய தினமும் மின்சாரம் துண்டிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.