சீனாவிடமிருந்து மேலும் 176,100 கோடி ரூபாய் கடன்!

சீனாவிடமிருந்து மேலும் 176,100 கோடி ரூபாய் கடன்!

மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்துக்காக, 176,100 கோடி ரூபாய் இலகு கடனை வழங்கும் உடன்படிக்கையில் சீனாவும், இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளன.

நிதி அமைச்சில் நேற்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில், அமைச்சின் செயலாளர் சமரதுங்கவும், சீன எக்சிம் வங்கி சார்பில் இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவானும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதற்கட்டமான, கடவத்த தொடக்கம் மீரிகம வரையான பகுதியில் பணிகளை மேற்கொள்வதற்கு 1.164 பில்லியன் டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் எக்சிம் வங்கியின் மூலம் இந்தக் கடன் வழங்கப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Copyright © 4196 Mukadu · All rights reserved · designed by Speed IT net