மன்னார் உட்பட பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மன்னார் உட்பட பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வடமேல் மாகாணம், மன்னார், கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று கடும் வெப்பமான காலநிலை நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேலைத்தளங்களில் உள்ளவர்கள் போதுமான அளவு நீர் அருந்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வீட்டிலுள்ள வயோதிபர்கள் மற்றும் நோயாளர்கள் தொடர்பில் அதிகம் அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாகனங்களில் சிறுவர்களை தனியாக வைத்து விட்டு செல்ல வேண்டாம் எனவும், வெளியில் அதிக நேரம் செலவிட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள் இலேசான அல்லது வௌ்ளை நிறத்திலான ஆடைகளை அணியுமாறு பொது மக்களிடம் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net