வரவு செலவு திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்! காரணம் கூறும் சிறீதரன்.

வரவு செலவு திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்! காரணம் கூறும் சிறீதரன்.

அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவு திட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கூட்டமைப்பு இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி காப்பாற்றி வைத்திருப்பதாக கூறுவது உண்மையே.

அதற்கு காரணம் இருக்கின்றது. தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காவிட்டால் மகிந்த ராஜபக்சவே ஆட்சிக்கு வருவார். மகிந்த ஆட்சிக்கு வருவதை எமது மக்கள் விரும்புவார்களா?

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்காவிட்டால் அரசாங்கம் கவிழும். நடுநிலை வகிக்கவும் முடியாது. இவை இரண்டையும் செய்தால் நிச்சயம் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வருவார்.

ஆகையினால் வரவு செலவு திட்டத்திற்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்கும். இதனிடையே, இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டும் என கோத்தபாய ராஜபக்ச நினைக்கின்றார்.

ஜனாதிபதியாக வர வேண்டும் என்ற கனவை முதலில் அவர் விட வேண்டும். அவர் ஜனாதிபதியாக வருவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மேலும் கூறியுள்ளார்.

Copyright © 8365 Mukadu · All rights reserved · designed by Speed IT net