மதுபானத்திற்காக 5 நாள் குழந்தை விற்பனை!

மதுபானத்திற்காக 5 நாள் குழந்தை விற்பனை!

மாத்தறையில் தனது 5 நாள் குழந்தையை விற்பனை செய்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மதுபானத்திற்கு பணம் இல்லாமையினால் குறித்த குழந்தையை 1000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.

திக்வெல்ல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த குழந்தை அயலவர்களிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் திக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த பிரியந்த என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 4 பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

கிடைக்கபெற்ற தகவலுக்கமைய உடனடியாக செயற்பட்ட திக்வெல்ல பொலிஸ் அதிகாரிகள் தந்தையை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரை சரீர பிணையில் விடுவிப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Copyright © 7258 Mukadu · All rights reserved · designed by Speed IT net