வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் குளறுபடிகள்!

வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் குளறுபடிகள் – அறிக்கையில் தகவல்!

2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் குளறுபடிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற நிதிக்குழுவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிதி செயற்குழுவின் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெட்ரோலிய வளத்துறை ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு நேற்று(வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதுடன், ஆதரவாக 84 வாக்குகளும் எதிராக ஓர் வாக்கும் கிடைத்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Copyright © 7927 Mukadu · All rights reserved · designed by Speed IT net