புலிகளுக்கே அக்கறை அதிகம் : தமிழ் மக்களுக்கு பசில் அறிவுரை!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கே அக்கறை அதிகம்! தமிழ் மக்களுக்கு அறிவுரை வழங்கும் பசில்!

தமிழ்த் தலைவர்களை விடவும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கே தமிழ் மக்கள் மீது அக்கறை அதிகம் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு தமிழ் மக்கள் தொடர்பில் எவ்வித அக்கறையும் கிடையாது.

இவர்கள் சுயநல சிந்தனை கொண்டவர்கள், இதனை தமிழ் மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் தலைவர்களை விட தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டிருந்தனர்.

இந்த அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு பிரதான காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பேயாகும்.

மாகாண சபைத் தேல்தலை நடத்தினால் இவர்களுக்கு 20 சதவீத வாக்குகள் கூட கிடைக்காது என குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2084 Mukadu · All rights reserved · designed by Speed IT net