இலங்கையில் இன்று முதல் அமுலாகும் புதிய நடைமுறை!

இலங்கையில் இன்று முதல் அமுலாகும் புதிய நடைமுறை!

இலங்கையில் உணவுப் பொருட்களை கைகளால் தொட்டு விநியோகிக்க இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்களை நேரடியாக கைகளால் தொட்டு விநியோகிக்க மற்றும் பரிமாறும் ஹோட்டல் மற்றும் சிற்றுண்டிச்சாலை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு எதிராக இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இன்று முதல் ஹோட்டல் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் உணவுகளை கையுறை மற்றும் அதற்கான உபகரணங்கள் மூலமே தொட முடியும்.

இந்த நடைமுறையை சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவு அமுல்படுத்தியுள்ளது. அதனை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரமான கையுறை மற்றும் கரண்டி உள்ளிட்ட உபகரணங்கள் பயன்படுத்தப்பட வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net