நோர்வேயில் புதிய தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவகம்

நோர்வேயில் புதிய தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவகம்

நோர்வேயில் புதிய தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவகம் ஒன்று மக்களின் கவனத்தையீர்த்துள்ளது.

நோர்வேயின் கடற்கரையோரத்தில் பகுதியளவு நீரில் மூழ்கிய நிலையில் இந்த உணவகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் ஒஸ்லோவிலிருந்து 400 கிலோமீற்றர் தூரத்திலுள்ள கிறிஸ்டியன்சான்ட் நகரில் இந்த உணவகம் காணப்படுகின்றது.

இந்த உணவு விடுதியின் ஐந்தரை மீற்றர் உயரமான பகுதி கடல் நீருக்குள் உள்ளது.

கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த உணவகம் அப்பகுதி மக்கள் மத்தியிலும் சுற்றுலாப்பயணிகள் மத்தியிலும் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது.

அத்துடன், குறித்த உணவகத்தின் ஒளிப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net