அதிகாரிகளின் அலட்சியப் போக்கே மின் தடைக்கு காரணம்!
பொது பயன்பாட்டு ஆணைக்குழு உள்ளிட்ட குறித்த அமைச்சின் உயர் அதிகாரிகளின் அலட்சியப் போக்கே மின்சார நெருக்கடிக்கு காரணம் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும் புதிய மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்குவதே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் எனவும் குறித்த சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
அதிகரித்து வரும் மின் சக்திக்கான தேவைகளுக்கான தீர்வாக புதிய மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்காமை, புதிதாக நிர்மாணிக்கத் தீர்மானிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களில் நிர்மாணப் பணிகளை இடைநிறுத்தியமை, பொறியியலாளர்களின் பரிந்துரைகளை கவனத்திற் கொள்ளாமை வர்த்தக நடவடிக்கைகளை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டமை போன்ற காரணங்களே மின்சக்தி துறையின் பாரிய சிக்கல் நிலைக்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே எதிர்வரும் காலங்களில் புதிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒத்துழைப்பினை வழங்காவிட்டால் கடந்த காலங்களைப் போன்று எதிர்காலத்திலும் மின்சார சபையின் பொறியிலாளர் பிரிவு வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட வேண்டிய சூழல் உருவாகும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.