கொழும்பில் வெட்டுகாயங்களுடன் சடலம் மீட்பு!
கொழும்பில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள சடலத்தால் அப்பகுதியில் பரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
தினியாவல, இழுக்கெட்டிய பிரதேசத்தில் வைத்து முச்சக்கரவண்டிக்குள் இருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பெல்வத்தை பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
30000 ரூபாய் பணத்துடன், தனது கடைக்கு தேவையான பொருட்கள் சிலவற்றை கொள்வனவு செய்ய குறித்த நபர் சென்றுள்ளார்.
இதன்போது அந்த பணத்தை கொள்ளையடிப்பதற்காக அவரை கொடூரமாக கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலையுடன் தொடர்புடையவர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.