நடிகைகளை பூதக் கண்ணாடி வைத்து ஆராய்கிறார்கள்!

நடிகைகளை பூதக் கண்ணாடி வைத்து ஆராய்கிறார்கள்!

நடிகைகளின் தவறை பூதக்கண்ணாடி வைத்து தேடுகிறார்கள் என நடிகை கீர்த்தி சுரேஷ் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார்.

கொமர்ஷியல் ஹிட் படங்களில் நடித்து வந்த அவருக்கு நடிகை சாவித்ரியின் வரலாற்று படமான ‘நடிகையர் திலகம்’ புதிய பரிணாமத்தைக் கொடுத்தது.

இந்தப் படம் கீர்த்தி சுரேஷின் நடிப்பை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றது. இதனால், தனது அடுத்தடுத்த படங்களை மிகவும் கவனமாக அவர் தேர்வு செய்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர், நடிகைகள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியிருக்கும் கீர்த்தி சுரேஷ், “நடிகர், நடிகைகள் சொகுசாக வாழ்வதாக நினைக்கிறார்கள். அவர்களுக்கும் கஷ்டம் உள்ளது.

சாதாரண மக்கள் மாதிரி வெளியில் சுற்ற முடியாது. சிறிய ஆசைகளை விட்டுக்கொடுக்க வேண்டும்.

அவர்கள் என்ன செய்தாலும் அதில் தவறு கண்டுபிடிக்கலாமா என்று பூதக்கண்ணாடி வைத்து தேடுவார்கள்.

ஆனால் நான் ஆசைகள் எதையும் விட்டு கொடுக்கவில்லை. முன்பு மாதிரியே ஷாப்பிங் போகிறேன்” என்று கூறியுள்ளார்.

Copyright © 7258 Mukadu · All rights reserved · designed by Speed IT net