எங்கள் உரிமைகளை நாங்களே அனுபவிக்க இடமளிக்க வேண்டும்!
இந்நாட்டில் தமிழ் மக்களுக்கு இறைமை இருக்கின்றது எனவும், இந்நிலையில், எங்கள் உரிமைகளை நாங்கள் அனுபவிக்க இடமளிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“தற்போதைய அரசாங்க காலத்தில் புதிய அரசியல் அமைப்பிற்கான பணிகள் முன்கெடுக்கப்பட்டன. எனினும், தற்போது அந்த பணிகள் கைவிடப்பட்டுள்ள நிலையில் இருக்கின்றது.
எதற்காக அந்த பணிகள் கைவிடப்பட்டது என்று தெரியவில்லை. தமிழ் மக்களுக்கும் இந்நாட்டில் இறைமை உண்டு.
ஆகையினால், எங்கள் உரிமைகளை நாங்கள் அனுபவிக்க இடமளிக்க வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.